ஈழத்தில் விடுதலைப் போர் வெடிக்கும்!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தமிழ் தமிழர் இயக்கத்தின் கொள்கைப்பரப்பு பொதுக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. பொதுக்கூட்டத்தில் ஈழ கவிஞர் காசியானந்தன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், தமிழ் ஈழம் என்பது தமிழர்களின் தாயகம். ஈழப் போர் தொடங்கியபோது சென்னை இலங்கை தூதரகம் முன்பு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணா விரதமிருந்தவர்களை ஆதரித்துப் பேசினார் மூதறிஞர் ராஜாஜி.

அதன் பின் நடந்த இரண்டு ஈழப் போராட்டத்திலும் நாம் பதினைந்தாயிரம் ஏக்கர் பரப்பு நிலத்தை சிங்களவரிடம் இழந்தோம். ஆனால் விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் ஆயுதமேந்திய காலங்களில் நாம் கையளவு நிலத்தைக் கூட பறிகொடுக்கவில்லை.

முள்ளி வாய்க்கால் கொடுமையைப் பற்றி இந்திய அரசு சொல்லத் தயங்குகிறது. ஜந்தாயிரம் வீடுகள் தமிழர்களுக்கு கட்டித்தரப்பட்டதாக அங்கே உள்ளவர்கள் சொல்கிறார்கள்.

ஆனால் அங்கே போய் வந்தவர்களோ 500 வீடுகள் தான் கட்டப்பட்டுள்ளன என்கின்றனர். தாய் தமிழச்சிகள் சொல்ல முடியாத பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

ஈழத்தில் பெரிய விடுதலைப் போர் வெடிக்கும் என்றபடி தனது உணர்ச்சிபூர்வமான உரையை முடிந்தார் கவிஞர் காசியானந்தன்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply