இந்தியா வரும் சகல இலங்கை மக்களுக்கும் பூரண பாதுகாப்பு!
இந்தியாவிற்கு விஜயம் செய்யும் சகல இலங்கையர்களுக்கும் பூரணபாதுகாப்பு அளிக்கப்படும் என கொழும்பிற்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் சகல மாநிலங்களுக்கும் விஜயம்செய்யும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவிற்கு செல்லும் இலங்கையர்களுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பிலே இந்தக் கருத்துக்கள் வெளியிடப்படுவதாகவும் உயர்ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட நாட்டின் சகல மாநிலங்களுக்கும் விஜயம் செய்யும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது மத்திய அரசாங்கத்தின் கடமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் 200,000 இலங்கையர்களுக்கு இந்தியா செல்ல வீசா அனுமதிவழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. 2011ம் ஆண்டில் சுமார் 175000 இந்தியர்கள் இலங்கைக்கு விஜயம்செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply