வன்னியிலிருந்து பொதுமக்களை வெளியேற விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும்:யாழ் குடாநாட்டில் பேரணி
வன்னியிலிருந்து பொதுமக்களை வெளியேற விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டுமெனக்கோரி யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று நடத்தப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் 11 மணியளவில் யாழ்ப்பாணம் அரசாங்க அதிபர் அலுவலகத்துக்கு முன்னால் ஒன்றுதிரண்ட மக்கள், வன்னி மக்களை வெளியேற விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டுமெனக் கோரி மஹஜரொன்றை அரசாங்க அதிபரிடம் கையளித்துவிட்டு அங்கிருந்து பேரணியாகப் புறப்பட்டனர்.
பேரணியில் கலந்துகொண்ட சுமார் 3000 பேர் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதி மற்றும் கோவில் வீதியூடாகச் சென்று ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் மற்றுமொரு மஹஜரைக் கையளித்துள்ளனர். அதன் பின்னர் நல்லூர் கோவில் முன்னறில் பேரணி பிற்பகல் 2 மணியளவில் முடிவடைந்தது.
இன்றைய பேரணியை ஈ.பி.டி.பி. ஏற்பாடு செய்திருந்ததுடன், பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொலைபேசிமூலம் நன்றி தெரிவித்ததாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply