இலங்கை நோக்கி பயணித்த கப்பலில் திடீர் தீ

இலங்கைக்கு இரசாயன திரவியங்களை ஏற்றி வந்த கப்பல் ஒன்று இந்திய மும்பை கடற்கரை பகுதியில் நேற்று (09) திடீர் தீ விபத்துக்கு உள்ளானது.

நேற்று மாலையில் இரசாயனப் பொருட்களை ஏற்றி ஆம்ஸ்டர்டாம் பாலம் அருகே சென்றபோது சரக்கு கப்பலில் தீடீர் தீ ஏற்பட்டுள்ளது.

பின்னர் தகவல் அறிந்து மும்பை கடலோரப்படை அதிகாரிகளின் இரண்டு கப்பல்கள் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டன.

நடந்த ஆய்வில் கப்பலின் இயந்திரப்பகுதி அருகே சத்தம் கேட்டதாக தெரியவந்தது. கப்பலின் மத்திய பகுதியிலும் தீ பற்றி இருந்தது. பின்னர் தீயணைக்கப்பட்டது. இக்கப்பல் நாளை (11) கொழும்பை வந்தடையும் என எ‌திர்பாக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply