மூன்று மாகாணங்களுக்கான முதலமைச்சர்கள் குறித்து இவ்வாரம் தீர்மானம்

தேர்தல்கள் நிறைவடைந்த மாகாணங்களுக்கான முதலமைச்சர்கள் குறித்து இந்த வாரம் தீர்மானிக்கப்படும் என்று, அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த இதனை எமது செய்திப்பிரிவிடம் தெரிவித்தார்.

இந்த வாரத்துக்கு தேர்தல் முடிவுகள் வர்த்தமானியில் அறிவிக்கப்படும்.

அதன் பின்னர் மாகாண முதலமைச்சர்கள் குறித்து தீர்மானிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளைசிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும், தேசிய சுதந்திர முன்னணியும் அரசாங்கத்துடன் இணைந்த கட்சிகள் என்பதால், கிழக்கில் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்படாது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த இதனைத் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply