ஈராக் துப்பாக்கிச்சூட்டு தாக்குதலில் 58 பேர் பலி
ஈராக்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் தூதரகத்திற்கு அருகில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு மற்றும், துப்பாக்கிச்சூட்டு தாக்குதலில் குறைந்தது 58 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பக்தாத்திலிருந்து 300 கி.மீ தெற்கே அமராவில் அதிகளவிலான வன்முறைகள் நேற்று பதிவாகியுள்ளன. ஷியா புனித ஸ்தலம், மற்றும் சந்தை பகுதியில் இரு கார் குண்டு தாக்குதல் நடைபெற்றதில் 16 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 100 பேர் காயமடைந்துள்ளனர்.
இதை தவிர்த்துஇ டுஜ்ஜாயில் எனும் இடத்தில் தற்கொலை கார் குண்டு தாக்குதலில் 11 இராணுவ வீரர்கள் கொல்லபப்ட்டுள்ளனர். கிர்குக் எனும் இடத்தில் ஈராக்கின் வடக்கு எரிபொருள் நிறுவனம் அமைந்துள்ள பகுதியில் நடந்த கார் குண்டு தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நசிரியா எனும் இடத்தில் பிரான்ஸ் தூதரக கட்டிடத்தை இலக்குவைத்தும் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் ஒரு காவலர் பலியாகியுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.
அல் கைதாவின் கிளை அமைப்பான ஈராக்கின் இஸ்லாமிய தேசம் அமைப்பினர் அதிகளவிலான தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ளனர். 2006-07 காலப்பகுதியிலிருந்து ஈராக்கில் நடைபெற்று வரும் அதிகளவிலான வன்முறைகளில் பல்லாயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். அல் கைதாவுடன் தொடர்புடைய சுன்னி முஸ்லீம்கள், ஷியா முஸ்லீம்களுக்கு எதிராக தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகள் பெருமளவில் வெளியேறிய பின்னர் தாக்குதல்கள் இன்னமும் தீவிரமாகியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply