ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பில் ஒத்துழைப்பு

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பில் ஒத்துழைப்பு வழங்க முடியும் என பொதுநலவாய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தக் கூடிய இயலுமையை உருவாக்கிக் கொள்ளும் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு உதவிகள் வழங்கப்படும் என பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெறவுள்ள 58ம் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு முன்னர், கமலேஷ் சர்மா இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

அபிவிருத்தி, ஜனநாயகம் மற்றும் பல்வகைமை போன்றவற்றை ஏற்படுத்த ஒத்துழைப்பு வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்யும் கமலேஷ் சர்மா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply