தடுத்து வைக்கப்பட்டுள்ளேர், காணாமற் போனாரை மீட்க ஆர்ப்பாட்டம்
வவுனியா குருமன் காடு காளி கோவிலடியில் எதிர்வரும் 12 ம் திகதி புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரார்த்தனை மற்றும் அமைதி ஆர்ப்பாட்ட நிகழ்வில், நீண்டகாலமாக அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருப்போர், சரணடைந்து தடுத்து வைக்கப்பட்டிருப்போர், சரணடைந்து காணாமல் போனோர், கடத்தப்பட்டு காணாமல் போனோர் ஆகியோர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அணிதிரண்டு கலந்துகொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், மக்கள் கண்காணிப்பு குழுவின் அழைப்பாளருமான மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், மக்கள் கண்காணிப்பு குழுவின் சிரேஷ்ட உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரனால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வுக்கு தமது கட்சி முழுமையான ஒத்துழைப்பை வழங்குகிறது என தெரிவித்துள்ள மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
தடுத்து வைக்கப்பட்டிருப்போர் மற்றும் காணாமல் போனோர் பிரச்சினையே இன்றைய காலகட்டத்தில், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரதான மனித உரிமை பிரச்சினையாகும். எமது பிரச்சினைகளை இந்த அரசாங்கத்துக்கு மீண்டும், மீண்டும் நாம் எடுத்துகூறி வந்துள்ளோம். இதனாலேயே இத்தகைய ஒரு பிரச்சினை இருப்பது உலகின் கவனத்துக்கு வந்துள்ளது.
தமது உறவுகள் பிரிந்து வாழும் அனைத்து குடும்பங்களின் உறுப்பினர்களையும், நண்பர்களையும் ஒன்று சேர்க்கும் பணியில் மக்கள் கண்காணிப்பு குழு ஈடுபட்டு வருகின்றது. இந்த அடிப்படையில், இன்றைய உலக சூழல் கூடி வரும் வேளையில், எமது மக்களை மீண்டும் ஒன்றுகூட்டி எமது குரலை ஓங்கி ஒலிப்பது எமது கடைமையாகும். இதை எதிர்வரும் புதன்கிழமை வவுனியாவில் உணர்வுடன் செய்வோம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply