ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

கச்சத்தீவு அருகே, மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் விரட்டியடித்தனர்.

ராமேஸ்வரத்திலிருந்து, நேற்று முன்தினம் நள்ளிரவில், கச்சத்தீவு கடல் பகுதிக்குச் சென்ற, ராமேஸ்வரம் மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் வழிமறித்து, கற்களை வீசித் தாக்கினர். சில படகுகளில் இருந்த மீன்களை பறித்துக்கொண்டு, இலங்கைக் கடல் பகுதிக்குள் வராதீர்கள் என, எச்சரித்து விரட்டியடித்தனர்.

இதுபோல், தலைமன்னார் கடல் பகுதிக்குச் சென்ற மீனவர்களையும், விரட்டி விட்டனர். இலங்கைப் படையினர் தாக்கியதில் ராயப்பன், அடிமை ஆகியோர் படகுகளில் சென்ற மீனவர்களுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால், மீனவர்கள் உடனடியாக ராமேஸ்வரம் திரும்பினர். காயமடைந்தவர்கள், போலீஸ் விசாரணைக்குப் பயந்து, சிகிச்சை கூட மேற்கொள்ளாமல் சென்று விட்டனர்.

“இலங்கைக் கடல் பகுதியில், இரட்டைமடி வலையைப் பயன்படுத்தும் சில மீனவர்களால் தான், அந்நாட்டு கடற்படையினர் விரட்டியடிப்பதாக´ சில மீனவர்கள் கருத்துத் தெரிவித்தனர். இவ்வகை மீன்வலையில் அதிக மீன்கள் பிடிபடும் என்றும் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply