அகதி சிறார்களின் நலன்களில் கவனம் செலுத்துமாறு இந்தோனேசியாவிடம் கோரிக்கை
இந்தோனேசியாவில் நிர்கதியாகவுள்ள இலங்கை உட்பட்ட ஏனைய நாட்டு அகதி சிறார்களின் நலன்களில் கவனம் செலுத்துமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தோனேஷியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை, ஆப்கானிஸ்தான், மியன்மார் போன்ற நாடுகளில் இருந்து அகதிகளில் உள்ளடங்கியுள்ள சிறார்களுக்கு கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை இந்தோனேஷிய அரசாங்கம் செய்து கொடுக்கவில்லை. அத்துடன் அவர்கள் தடுத்து வைக்கப்படும் பொழுது பிழையான முறையில் நடத்தப்படுகின்றனர்.
இந்தோனேஷிய அரசாங்கம் குறித்த சிறார்களுக்கு மற்றும் அவர்களது குடும்பத்தவர்களுக்கு சட்ட ரீதியான அகதி அந்தஸ்தைப் பெற்றுக் கொள்ள சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ள வில்லை எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதன் காரணமாக, அகதி சிறார்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின், சிறார் உரிமைகளுக்கான பணிப்பாளர் சாமா காசன் நெவ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அவுஸ்திரேலியாவிற்கு வரும் அகதிகளை பசிவிக் தீவுகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை இந்த வார இறுதியில் ஆரம்பிக்க உள்ளதாக அவுஸ்திரேலியாவின் குடிவரவுத் துறை அமைச்சர் கிரிஸ் போவன் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply