எமது உறவுகளை வன்னியில் இருந்து சுதந்திரமாக வெளியேற புலிகள் அனுமதிக்க வேண்டி மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி:சமாதானத்தை விரும்பும் தமிழர்கள்

எதிர்வரும் 3ம் திகதி மன்னாரில் புலிகளுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்.

எதிர்வரும் 3ந் திகதி மன்னாரில் காலை 11 மணிக்கு சமாதானத்தை விரும்பும் தமிழர்கள் புலிகளுக்கெதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது. இவ் ஆர்பாட்டத்தில் வன்னியில் ஓர் சிறிய பகுதியினுள் முடங்கியுள்ள புலிகள் தொடர்ந்தும் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்துவதை தவிர்த்து அவர்களது இயல்பு வாழ்கைக்கு வழிவிடவேண்டும்.

போராட்டம் எனும் பெயரால் தொடர்ந்தும் தமிழ் இளைஞர் யுவதிகளை யுத்த முனையில் பலிகொடுப்பதை கைவிட வேண்டும். தமது விருப்பத்திற்கு மாறாக இயக்கத்தில் தொடர்ந்தும் தடுத்து வைத்து போரில் ஈடுபடுத்தும் இளைஞர் யுவதிகளை விடுவித்து அவர்களை தமது குடும்பத்தினருடன் இணைந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கைகளுடன் புலிகளின் சகல மனிதநேயமற்ற செயற்பாடுகளையும் மக்கள் பகிரங்கமாக எச்சரிக்கும் முகமாக இவ் ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

புலியே தொடர்ந்தும் மக்களை மந்தைகளாக்காதே!
புலியே உன்கொடும் பிடியில் உள்ள மக்களை உடனடியாக விடுவி!
மக்களை மனித கேடயங்களாக பாவியாதே!
வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களே உங்கள் கண்களை திறந்து மக்களை பாருங்கள்!
புலிகளை காப்பாற்ற மக்களை துருப்புச்சீட்டாக பயன்படுத்தாதே!
வன்னியில் முடங்கியுள்ள புலிகளே மக்களை உடன் விடுதலை செய்!
புலிகளே உங்களுக்கு தேவை போர்
எங்களுக்கு தேவை சமதானம்!
போர் போர் என்று இழந்தது எல்லாம் போதும்
அமைதியாய் வாழ வழிவிடு!

இவ்வார்பாட்டத்திற்கு மன்னார் வவுனியா பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் எவ்வித அச்சமும் இன்றி புலிகளின் தொடர் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்க இணைந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டி நிற்கின்றனர்.

மூலம்/ஆக்கம் : ஊடக அறிக்கை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply