இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் பிரவேசித்த மூவர் கைது

இந்தியாவிலிருந்து கடல் வழியாக யாழ்ப்பாணத்திற்கு வந்த மூன்று பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.

இந்தியாவில் தங்கியிருந்த போது விசா முடிவடைந்துள்ள நிலையில் இராமேஸ்வரத்திலிருந்து யாழ்ப்பாணதத்திற்கு கடல் வழியாக பயணித்துக் கொண்டிருக்கும் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படகொன்றை 70 ஆயிரம் ரூபா வடகைக்கு அமர்த்தி இவர்கள் இலங்கை நோக்கி பயணித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் இந்தியாவுக்கு விமானம் மூலம் சென்றவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் வசவிலான், கொடிகாமம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எரிக் பெரேரா மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply