எஞ்சியிருக்கும் புலிகளும் சரணடைய வேண்டும் தவறினால் படையினர் பணிய வைப்பர் – ஜனாதிபதி
ஆயுதங்களைக் கைவிட்டு எஞ்சியுள்ள புலிகள் இயக்க உறுப்பினர்களும் பாதுகாப்பு படையி னரிடம் சரணடைய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன். தவறும் பட்சத்தில் இராணுவத்தினரால் பணிய வைக்கப்படுவதை எவராலும் தடுக்க முடியாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று ஹங்குரன்கெத்தவில் தெரிவித்தார்.
பாதுகாப்பு படையினரிடம் சரணடையும் புலிகள் இயக்க உறுப்பினர்களைக் கிழக்கு மாகாணத்தில் சரணடைந்தவர்களைப் போன்று சகல வசதிகளும் வழங்கிக் கவனிக்கவும் தயாராகவுள்ளோம். என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மத்திய மாகாண சபைக்கான நுவரெலியா மாவட்ட இரண்டாவது தேர்தல் பிரசாரக் கூட்டம், ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஹங்குரன் கெத்த ரிக்கில்லகஸ்கட பொரமடுல்ல மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. இவ்வைபவத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், வட பகுதியில் நடைபெறுவது தமிழ் மக்களுக்கு எதிரான யுத்த மல்ல, மாறாக பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து தமிழ் மக்களை விடுவிப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை.
வெண்ணிறச் சீருடை அணிந்து பாடசாலை செல்ல வேண்டிய அப்பாவி குழந்தைகள் ரி – 56 ரக துப்பாக்கிகளை ஏந்தியபடி, சயனைட் குப்பி களை கழுத்தில் அணிந்துகொண்டு குற்றச் செயலில் ஈடுபட வேண்டிய கட்டாய நிலைக்கு உட்படு த்தப்பட்டுள்ளனர். இந்தக் குற்றச் செயல்களிலிருந்து இக்குழந்தைகளைப் பாதுகாப்பது மூன்று குழந்தைகளின் தந்தையான எனது பொறுப்பாகும்.
பயங்கரவாதம் இந்த நாட்டிலிருந்து முழு மையாக ஒழித்துக் கட்டப்படும். புலிகள் இய க்கத்தினரின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி மக்களை விடுவி க்கவே 48 மணித்தியால கால அவகாசம் வழங்கினோம்.
எமது பாதுகாப்பு படையினர் கிளிநொச்சியை விடுவித்த சமயம் ஆயுதங்களைக் கைவிட்டு பாதுகாப்பு படையினரிடம் சரணடையுமாறு புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு ஏற்கனவே அழைப்பு விடுத்தோம். அந்த அழைப்பை ஏற்று புலிகள் இய க்கத்தினரின் பல உறுப்பினர் கள் சரணடைந்தார்கள். அவர் களை எமது பாதுகாப்பு படையினர் தெம்பிலி இளநீர் வழங்கி மனமார வரவேற்றனர்.
இவர்கள் வெள்ளைக் கொடிகளை ஏந்திய வர்களாக புலிகள் இயக்கத்தினரின் உடையுடன் வந்துதான் சரணடைந்தனர். அதனால்தான் புலிகள் இயக்கத்தில் எஞ்சியுள்ள உறுப்பினர்களையும் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பாதுகாப்பு படையினரிடம் சரணடையுமாறு மீண்டும் வலியு றுத்துகின்றேன். எமது வேண்டுகோள்படி சரணடை பவர்களை, கிழக்கு மாகாணத்தில் சரணடைந்தவர்களைப் போன்று கவனிக்கவும் தயாராகவுள்ளோம். இவ்வாறு சரணடையத் தவறும் பட்சத்தில் புலிகளை எமது பாதுகாப்பு படையினர் பணிய வைப்பார்கள். இதனை எவராலும் தவிர்க்க முடியாது. ஹங்குரன்கெத்தவுக்கு நான் பலமுறை வந்துள்ளேன்.
இப்போது போன்று முன்னொரு போதுமே மக்கள் கூடி இருக்கவில்லை. இந்நாட்டு மக்கள் இன, மத, மொழி, குல பேதங்களை மறந்து சிங்கக் கொடியின் கீழ் ஒன்றுபட்டுள்ளார்கள். அதனையே இந்த சனத்திரள் தெளிவுபடுத்துகிறது. அதேநேரம் ஐ. தே. க. முக்கியஸ்தர்களும், ஆதரவாளர்களும் சாரிசாரியாக வந்து சேருகின்றனர். அவர்களை நாம் மனமுவந்து வரவேற் கின்றோம்.
எமது வேலைத் திட்டம் தெளிவானது. தூரநோக்கு மிக்கது. கடந்த மூன்று வருட காலப் பகுதியில் துண்டா டப்பட்டிருந்த நாட்டை ஒன்றுபடுத்தியுள்ளோம். அத்தோடு மேல் மாகாணத்திற்குள் மட்டுப்படுத்தப் பட்டிருந்த அபிவிருத்தி வேலைத் திட்டங்களை கிராம மட்டத்திற்கும் கொண்டு சென்றுள்ளோம். கிராம மட்டத்தில் பாரியளவு அபிவிருத்திகள் இடம்பெற்றிருக் கின்றன.
வறுமைக்கும், வேலையின்மைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். நாட்டின் இறைமையையும், ஒருமைப் பாட்டையும் பாதுகாத்துள்ளோம். பருத்தித்துறை முதல் தேவேந்திரமுனை வரையும் தேசியக் கொடியைப் பறக்க விடக் கூடிய சூழலை ஏற்படுத்தியுள்ளோம். தேசியக் கொடியைப் பறக்கவிட்டு எமது பாதுகாப்பு படையினரை கெளரவிக்குமாறு கேட்டுக்கொள்ளுகிறேன் என்றார்.
இவ்வைபவத்தில் அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, சி. பி. ரத்நாயக்கா, பவித்திரா தேவி வன்னியாராச்சி, ஜகத் புஷ்பகுமார, டாக்டர் ராஜித சேனாரட்ன, உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply