ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கு எதிரான தடையுத்தரவு கைவிடப்பட்டது
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க உள்ளிட்ட கட்சியின 93 உறுப்பினர்களுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவை கொழும்பு மாவாட்ட நீதிமன்றத்தினால் கைவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.
கட்சியின் சட்டத்தரணிகள் சங்கத்துக்கு புதிதாக உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதற்கு எதிராக அதன் அதிகாரிகள் குழுவினால் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, நீதிமன்றம் இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பத்திருந்தது.
இன்றைய வழக்கு விசாரணையின் போது, இந்த தடை உத்தரவை நீடிக்குமாறு கோரப்பட்ட போதும், அதனை நிராகரித்த நீதிமன்றம் தடையுத்தரவையும் ரத்து செய்தது.
இது தொடர்பில் எதிர்ப்புகள் இருப்பின், எதிர்வரும் நொவம்பர் மாதம் முதலாம் திகதி, நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு நீதிpமன்றம் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply