மனித உரிமை ஆணையாளரை நியமிப்பதற்கு எதிர்ப்பு
பொது நலவாய நாடுகளுக்கு மனித உரிமை ஆணையாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக பல நாடுகள் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளன.
இதற்கு கனடா, அவுஸ்ரேலியா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள் தமது ஆதரவினை வெளியிட்டுள்ளன.
எதிர் கட்சியினை பிரநிதித்துவப்படுத்தும் வகையில் கலந்து கொண்டிருந்த, எதிர் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கஇ ஜயலத் ஜயவர்தன, ஜோன் அமரதுங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் ஆகியோர் தமது ஆதரவினை வெளியிட்டனர்.
இதனிடையே, சிறிமாவோ பண்டாரநாயக கண்காட்சி மத்திய நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் ஜீ எல் பீரிஸ் பொது நலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துரையாடல்களை மாத்தரமே மேற்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
எந்த நாட்டையும் பாதிக்கும் வகையிலான காரணங்கள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளும் உரிமை இந்த மாநாட்டிற்கு இல்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் தலைவிதியை தீர்மானிக்க வேண்டியது இலங்கையர்களே என அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply