இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகள் இலங்கையில் இல்லை

இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகள் எதற்கும் இலங்கையில் இடம் வழங்கப்பட  மாட்டாது என்று தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தி பணிப்பாளர் லக்ஷ்மன் ஹூலுகல்ல தெரிவித்துள்ளார்.

இந்திய நீர் மூழ்கி கப்பல்களின் நடமாட்டத்தை அவதானிக்கும் நோக்கில் பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ உளவு சேவை யாழ்ப்பாணத்தில் அவதானிப்பு நிலையம் ஒன்றை அமைத்துள்ளதாக இந்திய புலனாய்வு சேவையான ரோ அமைப்பை கோடிட்டு த பயினியர் என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ரோ அமைப்பு இந்திய புதுடில்கியில் கலந்துரையாடல்களை நடத்தி இந்த விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு இந்திய பாதுகாப்பு அதிகாரிகளை கேட்டுக்கொண்டது.

ரோ அதிகாரிகளின் அறிக்கையின் படி, பாகிஸ்தானின் ஐ எஸ் ஐயின் அவதானிப்பு மையம் மூலம், விசாகப்பட்டணத்தில் நங்கூரமிட்டிருக்கும் ரஷ்ய வம்சாவளியான ஐ என் எஸ் சக்ரா என்ற அணுவாயுத நீர் மூழ்கி கப்பல் மற்றும் ஏனைய இடங்களில் உள்ள நீர் மூழ்கி கப்பல்களின் தொலை தொடர்புகளை ஒட்டுக் கேட்க முடியும்.

எனவே, இது தொடர்பாக இலங்கைக்கு தெரியப்படுத்தி உண்மையை அறிய வேண்டும் என்றும் ரோ அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

இதேபோன்று, சீனாவும் அந்தமான் கடற் பிரதேசத்தில் உள்ள கப்பல்களின் நடமாட்டத்தை அவதானிப்பதற்காகஇ கொக்கோஸ் தீவுகளில், அவதானிப்பு நிலையத்தை அமைத்திருந்ததையும் ரோ அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, இந்த குற்றச்சாட்டு தொடர்பாக எமது செய்தி சேவை தேசிய பாதுகாப்பு தொடர்பாக ஊடக மையத்திய நிலையத்தின் பணிப்பாளர் லஷ்மன் உனுகல்லவை வினவியது.

இதன்போது பதிலளித்த அவர், இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக இலங்கையில் எவ்வித நடவடிக்கைகளுக்கும் இடம்தரப்பட மாட்டாது என குறிப்பிட்டார்.

அத்துடன், இது தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துக்கு அறிவிக்கவில்லை என்றும் லஷ்மன் உலுகல்ல தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply