பிரித்தானிய, கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வடபகுதிக்கு பயணம்
பொதுநலவாய பாராளுமன்றச் சங்கத்தின் 58வது அமர்வில் பங்கேற்க வந்த பிரித்தானிய மற்றும் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வடபகுதிக்குச் செல்வதற்கு பிரித்தானிய தூதரகம் ஏற்பாடு செய்தது அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கம் அவர்களை, போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதிக்கு அழைத்துச் செல்வதற்கு தயாராக இருந்த போதிலும் கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகம் சுதந்திரமான முறையில் அவர்கள் சென்று வருவதற்காக தனி விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது,
தனி விமானத்தில் பிரித்தானிய, கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களை வடபகுதிக்கு அழைத்துச் செல்வதற்கு கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகம் அனுமதி கோரியது அரசுக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்திய போதும், வேறு வழியின்றி அதற்கு பச்சைக்கொடி காண்பித்துள்ளது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அரச அதிகாரி ஒருவர், அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி இன்னமும் இலங்கை மீது அனைத்துலக போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ள முனைவதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் புலம்பெயர் தமிழர்கள் இலங்கையை இலக்கு வைத்து, பொதுநலவாய அமர்வுகளின் போது புதிய குற்றச்சாட்டுகளை தயார் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தமாதம் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையிலும், வரும் நவம்பரில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையிலும் இலங்கை்கு எதிரான பரப்புரைகளை அவர்கள் தீவிரப்படுத்தக் கூடும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply