வடமாகாண பூகோல வரைபடம் மாற்றம் பெறுகிறது
வடமாகாணத்தின் பூகோல வரைபடத்தில் எதிர்காலத்தில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்று இலங்கை நில அளவையியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நில அளவையியலாளர் மகேஸ்பெர்ணான்டோ இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான எல்லைகள் வரையறுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இதன்அடிப்படையில், 1:10 ஆயிரம் என்ற விகித அளவில் வடமாகாணத்தின் வரைபடம் ஒன்றை வரைய தயாராகி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் இடம்பெற்றகாலப் பகுதியில் வட மாகாணத்திற்கு முழுமையான பூகோல வரைபடம் ஒன்று இருக்கவில்லை.
தற்போது வடமாகாணத்தில் அபிவிருத்திகள் காணக்கூடியதாக இருப்பதால், அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், பூகோல பரைபட திணைக்களமும் பங்களிப்பு செய்கிறது.
அதன் அடிப்படையிலேயே வட மாகாணத்துக்கு புதிய தனியான வரைபடம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கையின் முழுமையான பூகோல விபரங்களை இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்கள் பிரிவுக்கு வழங்கியுள்ளது.
இது தொடர்பான உடன்படிக்கை ஒன்று இலங்கைக்கும், ஐக்கிய நாடகளின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான குழுவிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனர்த்து முகாமைத்துவம் மற்றும் மனிதாபிமான உதவிகள் வழங்குதல் தொடர்பில் இந்த விபரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply