சிறுவர்களின் உயிர்களைப் பணயம் வைத்து அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி

சிறுவர்களின் உயிர்களைப் பணயம் வைத்து அதிகாரத்தை கைப்பற்ற சில அரசியல் வாதிகள் முயற்சிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சிறுவர்களின் உயிர்களை அரசியல் இறையாகக் கொள்வதற்கு எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து சிறுவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நுகேகொடை சமுத்திராதேவி மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த விடங்களைத் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களை வீதியில் இறக்குவதற்கான பாரிய முயற்சியொன்று நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இதன்போது ஜனாதிபதி கூறினார்.

சிறுவர் மனங்களை மாசுபடுத்தாமல் அவர்களின் உலகை அவர்களுக்கே விட்டுவைப்பதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply