இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களில் கதிர்வீச்சை வெளிப்படுத்தும் பொருட்கள்
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட துருப்பிடிக்காத உருக்கு மற்றும் அலுமினிய உற்பத்தி பொருட்கள் கொண்ட கெள்கலன்களில் செயற்கை கதிர்வீச்சை வெளிப்படுத்தும் பொருட்கள் இருப்பது கொழும்பு துறைமுகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெவித்துள்ளனர்.
இப்பொருட்களை துறைமுகத்திலிருந்து வெளியே அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள அனுமதிக்கவில்லை என்று இலங்கை அணுசக்தி சபை தெரிவித்துள்ளது.
துருப்பிடிக்காத உருக்கு மற்றும் அலுமினிய உற்பத்தி பொருட்கள் கொண்ட கண்டெய்னரில் கோபால்ட் -60 எனும் மிக ஆபத்தான செயற்கை கதிர்வீச்சு காணப்பட்டதாக இலங்கை அணுசக்தி அதிகார சபையின்தலைவர் ஆர்.எல். விஜேவர்தன தெரிவித்திருக்கிறார்.
மேலும் இப்பொருட்களை இந்தியாவுககு திருப்பி அனுப்புவதற்கும் இந்திய அணுசக்தி ஆணைக்குழு மற்றும் சர்வதேச அணுசக்தி முகாமைக்கும் இப்பொருட்கள் குறித்து தெரிவிக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply