சீன நாடாளுமன்றத்தின் சபாநாயகர், கொம்யூனிஸ்ட் கட்சியினர் இலங்கையில்
சீன நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மற்றும் சீனாவின் ஆளும் கொம்யூனிஸ்ட் கட்சியின் பிரதித் தலைவர் ‘வூ பங்குவோ’ 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று மாலை இலங்கை வந்தடைந்தார்.
இலங்கை மற்றும் சீன நாடுகளுக்கிடையில் நிலவும் உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு இவரின் விஜயம் முக்கியமானதாக அமையும் என வெளிவிவகாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அவரின் இலங்கை விஜயத்தின் ஒரு கட்டமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனும், சீன ஆளும் கொம்யூனிஸ்ட் கட்சியின் பிரதித் தலைவர் கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவுள்ளார்.
இதேவேளை சீனாவின் உதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்தும் வூ பங்குவோ அவதானம் செலுத்தவுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply