ஜனாதிபதி அழைத்தால் பேச்சுவார்த்தை நடத்த தயார் தமிழ் தேசிய கூட்டமைப்பு
கிழக்கு மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் தமிழீழத்தை தோற்கடித்திருப்பதாக அமைச்சர் டளஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.ஹொரனையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 27 சதவீதமானவர்களே சிங்களவர்கள் இருக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 67 சதவீதமானவர்கள் தமிழர்கள், நான்கு சதவீதமானர்வகளே சிங்களவர்களாக இருக்கிறார்கள்.இருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 31 சதவீதமானவர்களே வாக்களித்துள்ளனர்.அரசாங்கத்துக்கு 69 சதவீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.
இதன்மூலம் 3ல் இரண்டு பங்கு மக்கள் தமிழீழத்தை தோற்கடித்திருப்பதாக டளஸ் அலகப் பெரும தெரிவித்தார். எவ்வாறாயினும் நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன ஐக்கியம் தொடர்பில் இவ்வாறான கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார்.
ஜனாதிபதி அழைத்தால் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும், மாறாக அமைச்சர் டளஸ் அலகப்பெருமவோ, கெஹெலிய ரம்புக்வெலவோ அல்லது சுசில் பிரேமஜெயந்தயோ வெளியிடும் கருத்து தொடர்பில் கவலை இல்லை என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply