ஆஸி செல்ல முற்பட்ட 65 இலங்கையர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் அடைப்பு

நடுக்கடலில், நாகை மீனவர்களால் மீட்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த, 65 பேர் பொலிஸ் விசாரணைக்கு பின் மண்டபம் அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டனர்.

இலங்கையில் இருந்து கடந்த மாதம், 24ம் திகதி படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்று நடுக்கடலில் படகில் கோளாறு எற்பட்ட காரணத்தினால் 19 நாட்கள் உணவு, குடிநீர் இல்லாமல் இவர்கள் தத்தளித்துக் கொண்டிருந்துள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த 65 பேரை நாகை மீனவர்கள் மீட்டு, 13ம் திகதி நள்ளிரவு, நாகைக்கு அழைத்து வந்தனர்.

நாகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அவர்களை பொலிசார் தங்க வைத்திருந்தனர்.

அப்பகுதி மீனவர்கள் அவர்களுக்கு உணவு மற்றும் உடைகள் வழங்கினர்.

முறையான அனுமதி இல்லாமல் வந்ததாக வழக்கு பதிவு செய்து அவர்களை அகதிகளாகக் கருதி மண்டபம் அகதிகள் முகாமுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply