கிறிஸ்தவ-முஸ்லிம் மக்களிடையே அமைதியை ஏற்படுத்த முயற்சி

கிறிஸ்தவ-முஸ்லிம் மக்களிடையே அமைதியை ஏற்படுத்தி, சமரசம் செய்வதற்காக சிரியாவில் மூன்று நாள்  பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. சிரியாவின் பெய்ருட் நகரில் நடக்கும் இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக  போப் 16-ம் பெனடிக்ட் லெபனான் வந்துள்ளார்.

போப் வருயையையொட்டி லெபனான் தெருக்களில் ராணுவத்தினர்  ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

இன்று மாலை நடக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொள்வார்கள்  என எதிர்பார்க்கப்படுகிறது. மத சுதந்திரம் மற்றும் சகிப்புத்தன்மை வேண்டி இக்கூட்டத்தில் போப் பிரார்த்தனை  நடத்த உள்ளார்.

முன்னதாக நேற்று மாலை சிரிய இளைஞர்களை சந்தித்த போப், அந்நாட்டு இளைஞர்களின்  மனதைரியத்தைப் பாராட்டியதோடு, அவர்களின் துயரங்கள் குறித்து வருத்தம் தெரிவித்தார்.

சிரியாவில் கடந்த 18 மாதங்களாக நடந்துவரும் உள்நாட்டுப் போர் காரணாமாக ஏற்பட்டுள்ள பதற்றத்தை  தணிப்பதற்காக போப் தற்போது சிரியா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply