பாதுகாப்பு வலயத்தினுள் வராதவர்களில் பாதுகாப்புக்கான பொறுப்பை ஏற்க முடியாது : இலங்கை அரசு
வடக்கே அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயங்களினுள் பொதுமக்கள் உடனடியாக வந்துவிட வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.அவ்வாறு வராதவர்களின் பாதுகாப்பை தாம் ஏற்க முடியாது என்றும் அது அறிவித்துள்ளது.விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும்பகுதியிலேயே இந்த பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்ட பகுதி இருக்கிறது.இருந்தபோதிலும், அந்த பகுதியில் தொடர்ந்து எறிகணைகள் வீழ்ந்து வெடிப்பதாக தொண்டு நிறுவனங்கள் குற்றஞ்சாட்டிவருகின்றன.
அதேவேளை, வடபகுதி மோதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இந்தியாவின் மருத்துவ உதவித்தொகுதி ஒன்று இலங்கை அதிகாரிகளிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply