பாதுகாப்புப் பகுதிக்கு வருமாறு மதத் தலைவர்களுக்கு அழைப்பு வத்திக்கான் பிரதிநிதியிடம்: ஜனாதிபதி
மோதல் இடம்பெறும் பிரதேசங்களில் தங்கியுள்ள மதத் தலைவர்களை அரசாங்கப் பாதுகாப்புப் பிரதேசங்களுக்கு வந்து சேருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அழைப்பு விடுத்தார்.மோதல் நடைபெறும் பிரதேசங்களிலிருந்து வந்துசேரும் மதத் தலைவர்களதும் பொதுமக் களினதும் நலன்புரி நடவடிக்கைகளைக் கவனிப்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைக ளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஜனாதி பதி தெரிவித்தார்.
இந்த செய்தியை மோதல் நடைபெறும் பிர தேசங்களில் தங்கியுள்ள மதத் தலைவர்களுக் குக் கொண்டு செல்லுமாறு வத்திக்கானின் இலங்கையிலுள்ள தூதுவர் மொன்சிக்னர் மரியோ சென ரரியிடம் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.வத்திக்கானின் இலங்கையிலுள்ள தூதுவர் ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் நேற்று சந்தித்துக் கலந்துரை யாடினார்.
இச்சந்திப்பின் போது ஜனாதிபதி, புலிகள் இயக்கத்தி னரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி சிவிலியன்களை எதுவிதமான பாதிப்புக் களுமின்றி விடுவிப்பதற்கு மேற்கொள்ள ப்பட்டுவரும் முயற்சிகள் குறித்தும் எடுத்துக் கூறினார்.
புலிகள் இயக்கத்தினர் அப்பாவி சிவிலியன்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வருவதையும் ஜனாதிபதி வத்திக்கானின் இலங்கையிலுள்ள தூதுவருக்கு இச்சமயம் சுட்டிக் காட்டினார்.
அப்பாவி சிவிலியன்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு அவர்களை விடுவிக்கவென புலிகள் இயக்கத்தினருக்கு ஏற்கனவே 48 மணி நேர கால அவகாசம் வழங்கப்பட்டது. அதே நேரம் ஆயுதங்களைக் கீழேவைத்துவிட்டு பாதுகாப்பு படையினரிடம் சரணடையுமாறும் புலிகள் இயக்க உறுப்பினர்கள் கேட்கப்பட்டுள்ளனர்.
இதன்படி புலிகள் இயக்க உறுப்பினர்கள் பலர் ஏற்கனவே சரணடைந்துள்ளனர். எஞ்சியுள்ளவர்களையும் சரணடையுமாறே மீண்டும் கேட்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் வத்திக்கானின் இலங்கை யிலுள்ள தூதுவர் ஜனாதிபதியை நேற்று சந்தித்தார். அச்சமயமே ஜனாதிபதி மோதல் நடைபெறும் பிரதேசங்களில் தங்கியுள்ள மதத் தலைவர்களைப் பாது காப்பு பிரதேசங்களுக்கு வந்து சேருமாறு அழைப்பு விடுத்தார்.
அத்தோடு இச்செய்தியை அவர்களுக்குக் கொண்டு செல்லுமாறும் வத்திக்கானின் இலங்கையி லுள்ள தூதுவரிடம் கேட்டுக்கொண்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply