61வது சுதந்திரதினம் நாளை கொழும்பில் பலத்த பாதுகாப்பு; முப்படைகளுடன் 10,000 பொலிஸார் கடமையில்
தேசிய சுதந்திர தினம் மற்றும் தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சியை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 8ம் திகதி வரை விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கமைய பத்தாயிரம் பொலிஸாரும், முப்படை வீரர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக நேற்றுத் தெரிவித்தார்.
முப்படையினருக்கு மேலதிகமாக சுதந்திர தின பிரதான வைபவங்களுக்காக நான்காயிரம் பொலிஸாரும், தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சிக்காக ஆறாயிரம் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
61வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை கொழும்பில் நடைபெற்றது.
தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஹேரத், பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர, கொழும்பு பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுப் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வி.ரி. சுந்தரலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக மேலும் உரையாற்றுகையில்:- வன்னி முழுவதையும் புலிகளின் பிடியிலிருந்து மீட்டெடுக்கும் மனிதாபிமான நட வடிக்கையின் இறுதிக்கட்டத்தை பாதுகாப்புப் படையினர் அடைந்துள்ள நிலையில் கொழும்பில் நடைபெற வுள்ள தேசிய சுதந்திர தின விழாவையும், தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை குழப்பவும் புலிகள் சூழ்ச்சிகளை மேற்கொள்ளலாம்.
இந்நிலையில் புலிகளின் சூழ்ச்சிகளை முற்றாக முறி யடிக்கும் வகையில் கொழும்பு, மேல் மாகாணம் உட்பட நாடுமுழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் முப்படையினரும் பொலிஸாரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சுமார் ஒன்றரை மாதங்களாக திட்டமிட்டு சிறந்த பாது காப்பு ஏற்பாடுகளை பொலிஸாரும், முப்படையினரும் மேற்கொண்டு வருகின்றனர். எனவே எமது பாதுகாப்பு போதியளவில் உள்ளது. இதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்.
கொழும்பிலும், அதனை அண்டிய பகுதிகளிலும் வசிப்ப வர்கள், தங்கியிருப்பவர்கள் தொடர்பாக சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்னரே தேவையான கணக்கெடுப்புக ளும், பதிவுகளும் மேற்கொண்ட பின்னரே பாதுகாப்பு ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டது. எனவே இதில் எதுவித குறைபாடுகளும் கிடையாது என்பதை உறுதியாக கூறுவதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.
சிறந்த முறையில் திட்டமிடப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாகவே கொழும்பில் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான ஆயுதங்கள், தற்கொலை அங்கிகளை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளதுடன் சந்தேக நபர்கள் பலரை கைது செய்துள்ளனர்.
இதனால் மேல் மாகாணத்தில் புலிகளால் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பாரிய தாக்குதல் முயற்சிகள் சிறந்த முறையில் முறியடிக்கப்பட்டுள்ளன.
பொலிஸாருக்கு மேலதிகமாக கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் உள்ள கடற்பரப்பிலும், வாவி களிலும் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் இந்த வான் பரப்பில் விமா னப்படையினரும், ஏனைய முக்கிய பிரதேசங்களில் இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டிலும் பார்க்க சிறந்த ஏற்பாடுகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கொண்ட சுதந்திர தின மாக இவ்வாண்டு சுதந்திர தினத்தை கொண்டாட தேவையான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் புலனாய்வுத் துறையினரும் கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிகவ மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply