இலங்கை திரும்பும் அகதிகளின் பாதுகாப்பு தொடர்பில் சந்தேகம்

அவுஸ்திரேலியா, கிறிஸ்மஸ் தீவில் இருந்து நௌரு தீவிற்கு அனுப்பும் திட்டத்துக்கு மறுப்பு தெரிவித்து மீண்டும் இலங்கை திரும்பிய அகதிகள் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக அதிக அந்தஸ்த்து கோரி விண்ணப்பித்திருந்த இந்த அகதிகள், இலங்கையில் இடம்பெறுகின்ற அச்சுறுத்தல்களை காரணம் காட்டி இருந்தனர்.

இலங்கைக்கு மீண்டும் செல்வதில் அச்சுறுத்தல் இருப்பதாக தமது விண்ணப்பங்களின் அவர்கள் சுட்டிக்காட்டி இருந்தனர்.

இந்த நிலையில் பசுபிக் திட்டத்தின் கீழ் அவர்கள் நௌரு தீவுக்கு அனுப்பி வைக்கப்படவிருந்த போதும், இந்த நௌரு தீவுக்கு செல்ல விரும்பாத இலங்கையர்கள் நாடு திரும்புவதாக அறிவித்தனர்.

அதன் அடிப்படையில் நேற்று சனிக்கிழமை 18 அகதிகள் இலங்கைக்கே அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய எதிர்கட்சியின் பிரதி தலைவர் ஜுலி பிசொப், இலங்கைக்கு மீண்டும் திரும்பிய அகதிகளுக்கு தற்போது அச்சுறுத்தல் இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர்களின் விண்ணப்பத்தின் படி, இலங்கையில் காணப்பட்ட அச்சுறுத்தல் நௌரு தீவில் இல்லாத போதும், ஏன் அவர்கள் இலங்கைக்கே திரும்பி சென்றனர் என்று பிசொப் வினவியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply