கிழக்கில் அரசாங்கத்திற்கு ஆதரவளித்தமை தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் விளக்கம்

கிழக்கில் ஆட்சி அமைப்பதற்கு அரசாங்கத்துக்கு ஆதரவளித்தமை தொடர்பில் விளக்கமளிப்பதற்கு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்றைய தினம் கொழும்பில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியது.

இதன் போது கருத்துரைத்த முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் அஸ்லம், கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நஜீப் ஏ. மஜீட்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் பொது செயலாளர் ஹசன் அலி சம்மதம் வெளியிட்ட பின்னரே அவர் முதலமைச்சராக நியமிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் பதவியை பெறுவதில் காணப்பட்ட சட்டசிக்கல்களை தொடர்ந்து, நஜீப் ஏ.மஜீட்டை நியமிக்க முஸ்லிம் காங்கிரஸ் இணங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாகாண அமைச்சர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply