நவநீதம்பிள்ளை ஆண்டு இறுதிக்குள் இலங்கை வருவார் ?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இந்த ஆண்டின் இறுதிக்குள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசேட பிரதிநிதிகள் திரும்பிச் சென்றுள்ளனர்.

இலங்கையின் நிலவரங்களை நேரில் பார்வையிட்டு உண்மைகளை கண்டறியும் நோக்கில் இந்தப் பிரதிநிதிகள் குழுவினர் விஜயம் செய்திருந்தனர்.

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பிரதிநிதிகள், நவநீதம்பிள்ளைக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட அமைச்சர்களுடன் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

வடக்கின் மனிதாபிமான நிலமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் பிரதிநிதிகள் தகவல்களை திரட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, யாழ்ப்பாண பேராயர் தோமஸ் சௌந்தரநாயகம், யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க, தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள், சிவில் அமைப்பு உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply