மாலினி பொன்சேகா மீண்டும் பதவி எற்கவுள்ளார்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய மாலினி பொன்சேகா மீண்டும் அந்த நாடாளுமன்ற உறுப்புரிமையை ஏற்கவுள்ளார்.
கலைஞர்களுக்காக தாம் அந்த பதவியில் நீடித்திருக்க வேண்டும் என ஜனாதிபதி தம்மிடம் தெரிவித்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாலினி பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக நாடாளுமன்ற பொதுசெயலாளரிடம் அறிவித்திருந்தார்.
இதன்பின்னர், இது குறித்து நாடாளுமன்ற பொது செயலாளரினால் தேர்தல்கள் ஆணையாளருக்கு தெளிவுப்படுத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில், குறித்த இடத்திற்கு ஒருவரை உள்வாங்குமாறு தேர்தல்கள் ஆணையாளரினால் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் கோரப்பட்டிருந்தது.
இதேவேளை, மாலினி பொன்சேகா மீண்டும் உறுப்புரிமையை பெற்று கொள்ள வேண்டுமாயின் மாலினி பொன்சேகாவின் பெயர் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட வேண்டும் என தேர்தல்கள் செயலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன்பின்னர், சபாநாயகர் முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்டு மீண்டும் உறுப்பினராக கடமையாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply