கிளிநொச்சி நகரிற்கு 37 மில்லியன் ரூபா செலவில் பொதுச்சந்தை: இன்று திறப்பு
முதற்கட்ட நிர்மாணப் பணிகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ள கிளிநொச்சி பொதுச் சந்தை இன்று காலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இந்த வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்றுள்ளது.
சிறு மற்றும் நடுத்தர அளவிலான நகரங்களை கட்டியெழுப்பும் திட்டத்தின் ஒரு அங்கமாக கிளிநொச்சி பொதுச் சந்தை கட்டடத் தொகுதி இன்று மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டடத் தொகுதியின் முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்கு 37 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பொதுச் சந்தை கட்டடத் தொகுதியில் 110 வர்த்தக நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
200 மில்லியன் ரூபா செலவில் அங்கு மேலும் மூன்று கட்டடத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற சந்தைக் கட்டடத் திறப்பு விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply