ஈரானின் அணுவாயுத திட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்காது

கடும்போக்குவாதத்துக்கு எதிராக உலக தலைவர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

நிவ்யோர்க்கில் இன்று ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் பொதுசபை கூட்டத்தின் ஆரம்பத்தில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடும்போக்கு கொள்கை மற்றும் வன்முறைகளை அகற்றுவதற்கு உலக தலைவர்கள் ஒன்றிணைந்து பேரணி நடத்த வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

அண்மையில் லிபியாவில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான திரைப்படத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தின் போது, அமெரிக்காவின் தூதுவர் ஒருவருடன் மேலும் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

இதனை மேற்கோள் காட்டி உறையாற்றும் போதே ஒபாமா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஈரானின் அணுவாயுத திட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply