தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் 10ம் திகதி இந்தியா செல்கிறது
தமிழ் தேசிய கூட்டமைப்பு அடுத்த மாதம் 10ம் திகதி இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொது செயலாளர் மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைக்கவுள்ள திட்டங்கள் தொடர்பில் நாளைய தினம் கட்சித் தலைவர்கள் சந்தித்து பேசவிருப்பதாகவும், அதன் பின்னரே இது தொடர்பில் அறிவிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை கிழக்கு மாகாண சபையில் இன்னும் அதிக அளவில் தமிழ் பிரதிநிதிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய சுதந்திர முன்னிணியின் மாகாண சபை உறுப்பினர் ஜயந்த விஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபையின் பிரதி தலைவர் பதவியையாவது, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கி இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் காலத்திலாவது, மாகாண சபையில் தமிழர்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply