இலங்கை தொடர்பில் செனட் சபை உறுப்பினர்கள் குழு ஹிலரிக்கு கடிதம்
அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் குழு ஒன்று, இலங்கை தொடர்பிலான கடிதம் ஒன்றை அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டனுக்கு அனுப்பியுள்ளது.
செனட் சபையின் 31 உறுப்பினர்கள் இந்த கடிதத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் பிரேரணை அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.
எனினும் இது தொடர்பில் இன்னும் அரசாங்கம் போதிய முன்னெடுப்புகளை மேற்கொள்ளவில்லை என்று செனட் உறுப்பினர்கள் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் அமெரிக்கா தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply