தமிழக மீனவர்கள் கடல் எல்லையை தாண்டாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும்
தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்பரப்பை அத்துமீறாதவகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, தமிழக அரசாங்கத்துக்கும், கடலோர காவற்படையினருக்கு சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் வைத்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதாக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது வழக்கினை விசாரணை செய்த நீதிபதிகளான வினோத் கே. சர்மா மற்றும் ஏ.செல்வம் ஆகியோர், தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைவதினாலேயே தாக்குதலுக்கு உட்படுவதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் அவர்கள் கடல் எல்லையை மீறாதிருப்பதாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய மற்றும் தமிழக அரசாங்கங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேவேளை கடற்பரப்பில் தமிழக மீனவர்களுக்கான பாதுகாப்புக்கான உறுதிபாடு ஒன்றையும், தமிழகத்தின் கடலோர காவற்படையினர் நீதிமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 28ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன் போது இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த மீனவர்கள் குறித்த தகவல்களை கோரி இருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply