விரிவுரையாளர்கள் சம்மேளனம் சில குழுக்களின் கை பொம்மையாக செயற்படுகிறது
அரச பரீட்சை முறைமைகளை குறைகூறி உயர்தர பரீட்சை மதிப்பீட்டு பணிகளிலிருந்து விலகியிருப்பதன் மூலம் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் தொழிற்சங்க நடவடிக்கைக்கு மாறாக அரச விரோத நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
எனவே, இந்த சூழ்ச்சியைத் தோற்கடிப்பதற்கு அணிதிரளுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்ரிபால சிறிசேன அறிக்கையொன்றின் மூலம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
லிபியா, எகிப்து, சிரியா ஆகிய நாடுகளைப் போன்று இலங்கையையும் மாற்றுவதற்காக ஏகாதிபத்திய சுதேச விரோத கட்சிகள் மற்றும் குழுக்கள் கூட்டாக இணைந்து தேசத்துரோக நோக்கங்களுக்காக செயற்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுக்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தை தங்களின் கை பொம்மைகளாக பயன்படுத்தி வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நாட்டு மக்களின் வாழ்க்கையில் மிகுந்த கௌரவத்திற்கு இலக்கான இலவச கல்வி, சுகாதாரம் என்பவற்றிற்கான அரச அனுசரணையை சமூக நலன்புரி மூலதர்மங்களின் அடிப்படையில் செயற்படுகின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாரியளவில் வழங்கி வருவதாக அமைச்சர் மைத்ரிபால சிறிசேன வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply