விக்கிலீக்ஸ்க்கு எதிரான விசாரணைகளை நிறைவு செய்யுமாறு கோரிக்கை

விக்கிலீக்ஸ்க்கு எதிரான விசாரணைகளை நிறைவு செய்யுமாறு அதன் நிறுவுனர் ஜுலியன் அசான்ஜே அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

லண்டனில் உள்ள ஈக்வடோர் தூதரகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜுலியன் அசான்ஜே கடந்த 660 நாட்களாக எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில கடந்த 100 நாட்களுக்கு முன்னர் அவர் லண்டனில் உள்ள ஈக்வடோர் தூதகரத்தில் தஞ்சமடைந்து, அங்கேயே தங்கியுள்ளார்.

தூதரகத்தில் இருந்து அவர் வெளியேறும் பட்சத்தில், லண்டன் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்படுவார்.

இதன் காரணமாகவே ஈக்வடோர் அரசாங்கம் அவருக்கு அகதி அந்தஸ்த்து வழங்கியுள்ள போதும் லண்டனில் இருந்து வெளியேற முடியாத நிலை காணப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply