நல்லிணக்க ஆணைக்குழுவினால் இதுவரையில் எந்த பலனும் இல்லை
ஐக்கிய நாடுகள் சபையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்க வலியறுத்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆறுமாதங்கள் நிறைவடைந்துள்ளன.
எனினும் இதுவரையில் இலங்கையில் அதற்கான சரியான நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்று சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு குற்றம் சுமத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்குவது தொடர்பில், இலங்கை அரசாங்கம் செயற்திட்டம் ஒன்றை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
எனினும் இந்த செயற்திட்டத்தினால் இதுவரையில் எந்த பலனும் இல்லை என்று நெருக்கடிகளுக்கான குழுவின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது நடைபெறகின்ற ஐக்கிய நாடுகளின் பொது சபைக்கூட்டத்தின் போது, இலங்கை அரசாங்கத்திடம் இருந்து செய்திட்டங்களை கோராமால், செயல்பாட்டை கோருமாறு வலியுறத்தியுள்ளது.
இதேவேளை போலியான அலங்காரங்களை வெளிப்படுத்தாமல், வடமாகாணத்தில் தேர்தல் நடத்தி, முழு ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply