ஐநா சர்வதேச சட்ட ஆலோசனை குழு அமர்வில் ஹக்கீம் பங்கேற்பார்
நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
உலக முஸ்லிம் தலைமைத்துவப் பேரவை, லண்டன் மேபெயார், டார்மூத் ஹவூஸில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் அமைச்சர் ஹக்கீம் ‘சிறுபான்மை சமூகமொன்றை வழிநடாத்துதல் – ஓர் இலங்கை அனுபவம்’ என்ற தொனிப்பொருளில் புதன்கிழமை தலைமைத்துவம் பற்றிய உரையாற்றியுள்ளார்.
உலக முஸ்லிம் தலைமைத்துவ பேரவை இஸ்லாமிய உலகில் தலைமைத்துவத்தின் முக்கியத்துவம் பற்றி அண்மைக்காலமாக கூடுதல் கவனம் செலுத்தி வருவதோடு, முஸ்லிம் உலகிற்கும் மேற்கத்திய நாடுகளுக்குமிடையில் தொடர்பாடலை பொறுத்தவரை ஓர் இணைப்புப் பாலமாகவும் உள்ளது. அதன் ஐரோப்பிய செயலகம் லண்டன் நகரிலும், ஆசியச் செயலகம் மலேஷியாவில் கோலாலம்புர் நகரிலும் அமைந்துள்ளன.
நியூயோர்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சட்ட ஆலோசனை குழுவின் ஆறாவது அமர்விலும் இலங்கையின் சார்பில் அமைச்சர் ஹக்கீம் கலந்துகொள்ளவுள்ளார். அடுத்த மாதம் 06 திகதி அவர் இலங்கை திரும்பவுள்ளதாக முஸ்லிம் காங்கிஸ் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply