ஜுலியன் அசேஜின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை
விக்கி லீக்ஸ் இணையத்தளத்தின் ஸ்தாபகர் ஜுலியன் அசேஞ், சுவீடனுக்கு நாடு கடத்தப்படும் பட்சத்தில் அவரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
விசேடமாக அமெரிக்காவிடம் ஜுலியன் அசேஞ் கையளிக்கப்படமாட்டார் என்ற உறுதிமொழியை சுவீடன் வழங்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் இரகசிய தகவல்களை வெளியிட்டு விக்கி லீக்ஸ் இணையத்தளம் பல்வேறு சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது.
இதனையடுத்து விக்கி லீக்ஸ் இணையத்தளத்துக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா முன்னெடுத்திருந்தது.
இந்த நிலையில் சுவீடனால் பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட ஜுலியன் அசேஞ் லண்டனில் வைத்து கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தார்.
இதேவேளை ஈகுவடோர் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள ஜுலியன் அசேஞ் தொடர்பான விவகாரம் இன்னும் முடிவில்லாமல் தொடர்கின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply