இன்னசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ் தயாரிப்பாளருக்கு விளக்கமறியல்
இறைத்தூதர் நபிகள் நாயகத்திற்கு அபகீர்த்தயை ஏற்படுத்தும் வகையில் திரைப்படத்தை தயாரித்த கலிபோனியாவைச் சேர்ந்த நக்கோலா பெசலியை விளக்கமறியலில் வைக்குமாறு அமெரிக்க மத்திய மாவட்ட பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த திரைப்படத்தை தயாரித்த நக்கோலா பெசலி நேற்று கைது செய்யப்படடார். இந்த நிலையில், அவர் இன்று நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் இடம்பெற்ற வங்கி கொள்ளை சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இதன் போது அவருக்கு இணையத்தளத்தை பாவிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அவர் சட்டவிரோதமான முறையில் இணையத்தளத்தை பாவித்ததாக குற்றம் சுமத்தியே தற்போது அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply