பாகிஸ்தானில் அமெரிக்க ஏவுகணை வீச்சு தலீபான் தளபதி உள்பட 20 பேர் பலி
பாகிஸ்தானில் உள்ள தெற்கு வசீரிஸ்தான் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது அமெரிக்க ஏவுகணை தாக்கியதில் தலீபான் தளபதி உள்பட 20 பேர் பலியானார்கள். அதிகாலையில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் ஏவுகணைகளை வீசி தாக்கியது. லாதா நகர் அருகே உள்ள தீவிரவாதிகள் பயிற்சி முகாமை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஆப்கானிஸ்தான் தலீபான் தளபதி ஜலாலுதீன் ஹக்கானியின் உதவியாளர் ஹாஜி ஒமர் கான் உள்பட 20 பேர் பலியானார்கள்.
தாக்குதல் நடந்த இடத்தை தீவிரவாதிகள் சுற்றிவளைத்தனர். கொல்லப்பட்ட 20 பேரும் யார்? யார் என்று அடையாளம் தெரியவில்லை.
இந்த ஏவுகணை தாக்குதல், கடந்த 10 நாட்களில் நடத்தப்பட்ட 12-வது தாக்குதல் ஆகும். வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தலைநகரான குவெட்டாவில் சோதனைச்சாவடியின் அருகில் கார்கள் நிறுத்தும் இடத்தில் கார் குண்டு தாக்குதல் நடந்தது. இதில் 2 பேர் பலியானார்கள். 12 பேர் காயம் அடைந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply