இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் ஒரு தொகுதியினர் நாடு திரும்பியுள்ளனர்
இரண்டாம் தொகுதி இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளனர். நெஹ்ரு தீவில் தங்கியிருப்பதனை விடவும், நாடு திரும்புவது பொருத்தமானது எனக் கருதிய மற்றுமொரு தொகுதி இலங்கையர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
படகு மூலம் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்து கிறிஸ்மஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர். கிறிஸ்மஸ் தீவிலிருந்து குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் விமானம் மூலம் இலங்கை புறப்பட்டுள்ளனர்.
நெஹ்ரு தீவுகளில் தங்குவதனை விடவும் இலங்கை திரும்ப புகலிடக் கோரிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுவதன் மூலம், சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களின் செயற்பாடுகள் அம்பலமாகியுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவுன் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களின் பொய்ப் பிரச்சாரங்களுக்கு ஏமாந்தே அதிளவான புகலிடக் கோரிக்கையாளர்கள் ஆபத்தான பயணத்தைத் தொடர்வாகக் குறிப்பிட்டுள்ளார். 28 புகலிடக் கோரிக்கையாளர்கள் இவ்வாறு நாடு திரும்பவுள்ளனர்.
தன்னார்வ அடிப்படையில் நாடு திரும்ப விரும்புவோருக்கு உதவிகளை வழங்கத் தயார் என சர்வதேச குடிப்பெயர்வு அமைப்பு அறிவித்துள்ளது.
இதேவேளை, 72 புகலிடக் கோரிக்கையாளர்களைக் கொண்ட படகு ஒன்று கொக்கோஸ் தீவுகளில் கரையொதுங்கியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply