தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒக்டோபர் 10ம் திகதி இந்தியா செல்கிறது

இந்திய அரசின் அழைப்பின் பேரில் எதிர்வரும் 10ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழு இந்தியா செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தூதுக் குழு தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளது.

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வுக்கான வழிவகையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயம் அமையும் என கூறப்படுகிறது.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கைக்கான இந்திய தூதர் அசோக் கே காந்தாவை நாளை மறுநாள் சந்திக்கவுள்ளதாகவும் அதன் பின்னர் 10ம் திகதி டெல்லிக்கு செல்லவுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தூதுக்குழு இந்திய பிரதமர் மன்மோகன்சிங், எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை டெல்லியில் சந்தித்துப் பேசவுள்ளது. பின்னர் தமிழகம் சென்று முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரை சந்திக்கவுள்ளது.

இந்த பயணத்தின் போது அரசியல் தீர்வில் ஏற்பட்டிருக்கும் இழுபறி, தமிழர் வாழும் வடகிழக்கின் தற்போதைய நிலைமை, நிலப் பிரச்சனை ஆகியவற்றை பற்றி கூட்டமைப்பு இந்தியாவிடம் விளக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply