இலங்கை அகதிகள் 15 பேரை நாடு கடத்த இந்தியா நடவடிக்கை

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா நோக்கிச் செல்ல முயற்சித்த இலங்கை அகதிகளில் 15 பேரை நாடு கடத்த இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த ஜூன் 3ம் திகதி கேரள – கொல்லம் பகுதியில் அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முயற்சித்த 151 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் 15 பேர் தங்களுடைய ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த தவறியதால் அவர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்.

இந்த 15 பேரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு கடந்த ஒகஸ்ட் 17ம் திகதி விடுவிக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 151 பேரில் மற்றையவர்கள் தமிழக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply