கிழக்கு மாகாண சபையின் சபை முதலவர் தமிழர்

கிழக்கு மாகாண சபையின் முதல்வராக தமிழ் உறுப்பினர் ஒருவரை முன்மொழிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம் காங்கிரஸின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த கிழக்கு மாகாண சபையில் எந்த ஒரு தமிழ் உறுப்பினருக்கும் எந்த பதவியும் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் மாகாண சபையின் சபை முதலவராக தமிழர் ஒருவரை நியமிக்க தீர்மானித்திருப்பதாக முஸ்லிம் காங்கிரஸின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி தலைவர் பதவியை தங்களுள் ஒருவருக்கு வழங்குமாறு ஏற்கனவே அனைத்திலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரிஸினுள் காணப்படுகின்ற முரண்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகஇ கட்சியின் உயர்பீடத்தை கூட்ட வேண்டும் என்று கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு ஆதரவளித்திருந்தமை தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் சில உறுப்பினர்களுக்கு இன்னும் உடன்படவில்லை என்று கூறப்படுகிறது.

அத்துடன் இவ்வாறான பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர் பீடத்தை கூட்டுமாறு கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply