தமிழ் மக்கள் இலங்கையில் இரண்டாம் குடிமக்கள் அல்லர்
தமிழ் மக்களை இலங்கையில் இரண்டாம் குடிமக்கள் என்று கருத முடியாது என்று சிங்கபூரில் உள்ள சர்வதேச பயங்கரவாத ஆராய்சி மையத்தின் தலைவர் ரொஹான் குணரத்ன தெரிவித்துள்ளார். ஏசியன் ட்ரிபியுன் இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் இரண்டாம் குடி மக்கள் என்ற பிரசாரத்தை முன்வைத்தே தமிழீழ விடுதலைப் புலிகள் தமது இயக்கத்தை வளர்த்துக் கொண்டனர். எனினும் இலங்கையில் தமிழ் மக்கள் பல்வேறு துறைகளில முக்கிய வகிபாகத்தை கொண்டுள்ளனர்.
கொழும்பில் 80 சதவீதமான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களே வர்த்தக செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர்.
இவ்வாறான நிலையில் தமிழ் மக்களை இரண்டாம் குடி மக்கள் என்று கூற முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளைஇ 13ம் திருத்தச் சட்டம் என்பது இந்தியாவின் தினிப்பு என்றும், இந்தி இராணுவம் இலங்கையில் இருந்த போது சந்தித்த தோல்வியை சரி செய்வதற்காகவே இந்த திருத்தம் முன்வைக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply