தலிபான்களின் தாக்குதலில் இதுவரை 2000 அமெரிக்கப் படையினர் பலி

ஆப்கானிஸ்தானின் வார்டாக் மாகாணத்தில் உள்ள ஒரு சோதனைச் சாவடியில் நேற்று தாக்குதல் நடந்தது. இதில் அமெரிக்கப் படையை சேர்ந்த ராணுவ வீரர் மற்றும் ஒரு ஒப்பந்தகாரர் உட்பட ஆப்கானைச் சேர்ந்த 3 பொலிசாரும் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சண்டை தீவிரவாதிகளாக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தவறுதலாக நடந்ததாக பின்னர் தெரியவந்துள்ளது.

2001-ம் ஆண்டு ஆப்கானை ஆண்ட தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படையினர் தாக்குதல் நடத்தினர். தலிபான்களை விரட்டியடித்த அமெரிக்கா அங்கு ஹமீது ஹர்சாய் தலைமையிலான அரசை நியமித்தது.

பின்னர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு அந்த அரசுக்கு உதவி வரும் அவர்கள் தலிபான்களின் தாக்குதலை சந்தித்து வருகின்றனர்.

இந்த தாக்குதலோடு மொத்தம் 2000 அமெரிக்கப் படையினர் இறந்துள்ளனர் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply