தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரது வீட்டிலிருந்து குண்டு மீட்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட்டு இம்முறை கிழக்கு மாகாணசபைக்கு தெரிவான கோவிந்தன் கருணாகரனது (ஜனா) வீட்டில் இருந்து கிரனைட் குண்டுகள் இரண்டு பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு செட்டிப்பாளையம் பகுதியிலுள்ள இவரது வீட்டு முற்றத்தில் இருந்தே இக் குண்டுகள் இரண்டும் மீட்கப்பட்டுள்ளன.

களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட குண்டுகள், குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் மூலமாக செயலிழக்கப்பட்டுள்ளன.

திருகோணமலையில் இன்று இடம்பெறவுள்ள கூட்டம் ஒன்றிற்கு கோவிந்தன் கருணாகரனது சென்றுள்ள நிலையில் அவரை விசாரணைக்கு உட்படுத்துவது தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் கவனம் செலுத்தி வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply